Action with a heart Headline Animator

Monday, August 23, 2010

89,000 விதவைகளுக்கு மீள் எழுச்சித் திட்டம்

வடக்கு, கிழக்கிலுள்ள 89 ஆயிரம் விதவைகளுக்காக விசேட மீள் எழுச்சி திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
இந்த திட்டத்தின் முதற் கட்டத்திற்கென 250 மில்லியன் ரூபாய் நிதியை நன் கொடையாக வழங்க இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளதாக சிறுவர் மேம்பாட்டு, மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இது தொடர்பாக இலங்கை க்கும், இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப் பட்டதுடன், இரு நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்திய அரசின் உதவியுடன் முன்னெடுக்கப்பட இருக்கின்ற இந்த மீள் எழுச்சி திட்டத்தின் முதற்கட்ட செயற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள் ளதாகவும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வடக்கு, கிழக்கில் மொத்தமாக 89 ஆயிரம் விதவைகள் அடையாளங் காணப்பட்டுள்ள னர். இவர்களில் 49 ஆயிரம் விதவைகள் கிழக்கு மாகாணத்தில் உள்ளனர். 40 ஆயிரம் விதவைகள் வட மாகாணத்திலும் உள்ளனர். இவர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 25 ஆயிரம் விதவைகள் இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் இதனை மையமாகக் கொண்டே முதற்கட்ட செயற்பாடுகளை மட்டக்களப்பி லிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப் படவுள்ள விதவைகளுக்கு தையல், விவ சாய, கணனி போன்ற துறைகளில் பயிற்சி கள் வழங்கப்படவுள்ளதுடன் சுயதொழில் ஊக்குவிப்பு முயற்சித் திட்டத்தின் கீழ் ஆடு, மாடு, விவசாய உபகரணங்கள், தையல் இயந்திரங்கள் உட்பட தேவையான உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது என்றார். இந்த மீள் எழுச்சித் திட்டத்தை மேலும் விஸ்தரித்து, சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தும் வகையில் ஆராயும் பொருட்டு அடுத்த மாதம் தான் புதுடில்லி பயணமாகவு ள்ளதாகவும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார். (ரு-து)(Thinakaran)

No comments: