Action with a heart Headline Animator

Tuesday, August 24, 2010

மட்டு. கரடியனாறு முருகன் ஆலய திருவிழாவுக்கு பொலிஸார் தடை அரியநேத்திரன் எம்.பி. பிரதமருக்குக் கடிதம்

மட்டக்களப்பு கரடியனாறில் அமைந் துள்ள முருகன் ஆலயத்தில் எதிர்வரும் 03.09.2010ஆம் திகதி தொடக்கம் திரு விழா நடத்துவதற்கு ஆலய நிர்வாகத் தினர் ஏற்பாடுகளைச் செய்துள்ள நிலை யில் பொலிஸார், தொல்பொருள் ஆராய் சியாளர்களின் அறிவுறுத்தலைக் காரணம் காட்டி இத்திருவிழாவை ந
கொழும்பு, ஒக. 24மட்டக்களப்பு கரடியனாறில் அமைந் துள்ள முருகன் ஆலயத்தில் எதிர்வரும் 03.09.2010ஆம் திகதி தொடக்கம் திரு விழா நடத்துவதற்கு ஆலய நிர்வாகத் தினர் ஏற்பாடுகளைச் செய்துள்ள நிலை யில் பொலிஸார், தொல்பொருள் ஆராய் சியாளர்களின் அறிவுறுத்தலைக் காரணம் காட்டி இத்திருவிழாவை நடாத்துவதற்குக் தடை விதித்துள்ளனர்.இது தொடர்பாக ஆலய நிர்வாகத்தினர் தன்னிடம் முறையிட்டுள்ளதாகவும் இதனால் இது விடயமாக தான் அரச அதிபர் மற்றும் பொலிஸ் அத்தியட்\கருடன் பேசி யும் பலன் கிடைக்காததால் மத விவகார அமைச்\ரான பிரதமருக்கு அவ\ர கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளதாக பா.அரிய நேத்திரன் தெரிவித்தார்.அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: அண்மையில் பிரதமர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களைச் \ந்தித்து, இந்து ஆலயங்களை அபிவிருத்தி செய்வதற்கும் அவற்றை பேணுவதற்கும் வேண்டிய உதவிகளைச் செய்வதாக கூறியிருந்தார். ஆனால் தற்போது அவரின் கருத்துக்கு எதிர்மறையாக மட்டக்களப்பில் வருடாவருடம் திருவிழா நடைபெறும் ஆலயத்தில் அத்திருதிழா நடைபெறாமல் தடைசெய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.இவ்வாறான செயற்பாடானது இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் நடவடிக்கையாகும். இவற்றை புரிந்துகொண்டு குறித்த ஆலயத்தில் வழமைபோல் திருவிழா நடைபெற \ம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (ஒசி) (Udayan)

No comments: