Action with a heart Headline Animator

Sunday, August 22, 2010

வன்னியில் கைவிடப்பட்ட வாகனங்கள் ஒப்படைப்பு

இறுதிக்கட்ட யுத்தத்தில் பொதுமக்களால் கைவிடப்பட்டுப் பின்னர் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்குக் கொண்டுவரப் பட்டுள்ள வாகனங்களுக்கான உரிமத்தை அடையாளம் காணும் பணிகள் நேற்று (21) மீண்டும் ஆரம்பமாகின.
இதற்கான நடமாடும் சேவை இன்று (22) ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெறுவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.
இன்றைய தினம் உரிமத்தை அடையாளம் காணும் பணியை நிறைவு செய்ய எதிர் பார்ப்பதாகவும் கூறினார். நேற்றைய தினம் 250 மோட்டார் சைக்கிள்களுக்கான உரிமையாளர்கள் தமது உரிமத்தை உறுதிப் படுத்தியுள்ளனர். வாகனப் பதிவுச் சான்றிதழ், இயந்திர இலக்கம் என்பன ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு உரிமம் உறுதிப்படுத்தப்படுவதாகவும் அதன் பின்னர் உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணி மேற்கொள்ளப்படுமென்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் கணக் காளர் ஜெயராசா வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்காலில் இருந்து 6400 மோட்டார் சைக்கிள்களும் 20 லொறிகள், பெளஸர்கள், கொள்கலன்கள் ஒரு பஸ் உட்பட 70 கனரக வாகனங்களும் கிளி நொச்சிக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றுள் 700 மோட்டார் சைக்கிள்களும் ஆயிரக் கணக்கான துவிச்சக்கர வண்டிகளும் ஏற்கனவே உரிமையாளர்களிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட கணக்காளர் ஜெயராசா, இன்றைய தினம் மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்கள் அடை யாளப் பணியைப் பூர்த்தி செய்ய எதிர் பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
இறுதி யுத்தத்தின் போது கைவிடப்பட்ட மேலும் பல வாகனங்கள் முள்ளிவாய்க் காலிலிருந்து கொண்டுவரப்படவிருப்ப தாகவும் அந்தப் பணிகளை ஆளுநர் மேற்கொள்வாரென்றும் அவர் மேலும் தெரிவித்தார். தற்போது கிளிநொச்சிக்குக் கொண்டு வரப்பட்டுள்ள வானங்களை உரிமையாளர் களிடம் ஒப்படைப்பதற்காக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் பீ. டி. லலித் தர்மபிரியவின் ஏற்பாட்டின் கீழ் எஸ். ஏ. பிரேமரட்னவின் தலைமையில் மோட் டார் போக்குவரத்து திணைக்களத்தின் 20 பரிசோதகர்களின் பங்களிப்புடன் இந்த நடமாடும் சேவை நடத்தப்படுகிறது.
வாகனங்களை உரியவர்களிடம் இலகு வாக ஒப்படைக்க ஏற்பாடுகளை செய்ய உதவுமாறு போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவிடம் கிளிநொச்சி அரச அதிபர் திருமதி கேதீஸ்வரன் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன.
நடமாடும் சேவையின் போது வாகனங் கள், மோட்டார் சைக்கிள்களின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்கள் இனம் காணப்படுவர். அத்துடன் இதுவரை பொதுமக்களினால் இனம் காணப்பட்ட வாகனங்களின் மோட்டார் சைக்கிள்களின் பதிவு செய்யப்படாதவை தொடர்பான பிரச்சினைகளுக்கும் உடனடி தீர்வு காணப்படும்.
ஏற்கனவே வாகன தரிப்பிடத்துக்கு வந்து தமது வாகனங்கள் மோட்டார் சைக்கிள்களை இனம்கண்டு வாகனங்கள் கையளிக்கப்படாத உரிமையாளர்கள் தீர்வினைப் பெற்றுக் கொள்ளுமாறும் அரச அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.(Thinakaran )

No comments: